ETV Bharat / state

கடல் அட்டைகள் கடத்தல்: திமுக பிரமுகர் வீட்டில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான ஆவணங்கள்!

கடல் அட்டைகள் கடத்தல் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட திமுக பிரமுகரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

sea cucumber
வில்லாயுதம்
author img

By

Published : Aug 13, 2021, 8:23 AM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் வேர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வில்லாயுதம். இவர் திமுக மாவட்ட மீனவர் அணிச் செயலாளராக இருந்துவருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பதுக்கி, இலங்கைக்கு கடத்த முயன்றது தொடர்பான வழக்கில் வில்லாயுதத்தை காவல் துறையினர் கைதுசெய்து ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

ஆனால், அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக, தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். வில்லாயுதம் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், முறையாக வருமான வரி செலுத்தவில்லை எனவும் அமலாக்கத் துறையினருக்குப் புகார்கள் வந்தன.

அதன்பேரில், கடந்த 9ஆம் தேதி வில்லாயுதம் வீடு, அவருக்குச் சொந்தமான விடுதியில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சுமார் 12 மணி நேரம் நீடித்த சோதனையில், அதிக எண்ணிக்கையிலான விற்பனைப் பத்திரங்கள், பண ரசீதுகள், ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட மொத்த ஆவணங்களின் மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் இருக்கும் என அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். 2000ஆம் ஆண்டு, கடல் அட்டைகளை அழிந்துவரும் இனப்பட்டியலில் சேர்த்து, இந்தியாவில் கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு ஒன்றிய அரசு தடைவிதித்தது. ஆனால், மலேசியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் உணவுக்காகவும், மருத்துவத்துக்காகவும் கடல் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

இதனால், கடலோர மாவட்டங்களில் பணத்துக்காகக் கடல் அட்டைகளைப் பதுக்கி சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவது தொடர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பட்டியலின அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜர் ஆகாத நடிகை மீரா மிதுன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.