ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் முருகேசன் 13,285 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் நேற்று (மே.2) நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் முருகேசன், அதிமுக சார்பில் சதன் பிரபாகர் ஆகியோர் போட்டியிட்டனர்.
பரமக்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் 26 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்திலிருந்தே திமுக வேட்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். திமுக வேட்பாளர் முருகேசன் 83,016 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் 70,488 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சசிகலா 16,262 வாக்குகளும், மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர் கருப்பு ராஜா 3,447 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் செல்வி 1,988 வாக்குகளும் பெற்றனர்.
திமுக வேட்பாளர் முருகேசன், அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனை விட 13 ஆயிரத்து 285 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் அலுவலர் திமுக வேட்பாளர் முருகேசனுக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார்.
இதையும் படிங்க: 8ஆவது முறையாக கோபிசெட்டிபாளையத்தின் எம்எல்ஏவாகிறார் செங்கோட்டையன்!