ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் இன்று (மார்ச் 30) பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடலாடி ஒன்றியத்துக்குள்பட்ட வீரம்பல் கிராமத்திற்குள் பரப்புரை மேற்கொள்ள நுழைய முற்பட்டார்.
அந்தச் சமயத்தில் அங்கு வந்த கிராமத்து இளைஞர்கள் ராஜகண்ணப்பனை ஊருக்குள் வரவிடாமல் தடுக்க முயன்றனர். பின்னர் அங்கிருந்த திமுகவினர் தடுத்து நிறுத்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முற்பட்டனர். ஆனால், ராஜகண்ணப்பன் சிறிது நேரத்திலேயே தனது பரப்புரையை முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்.
ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாகப் பேசி வலைதளங்களில் பதிவிட்டதாகவும், அவ்வாறு பேசியதைக் கண்டித்தே இளைஞர்கள் தங்கள் ஊருக்குள் அவரை வரவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நோ லாக்டவுன், நோ ஊரடங்கு- எடியூரப்பா!