ராமநாதபுரம்: கரோனா இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் பிரதம மந்திரியின் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் 11 ஆயிரம் கிலோ ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 1000 கிலோ திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யமுடியும். இதனை காணொளி வாயிலாக ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடக்க நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) காமாட்சி கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) காமாட்சி கணேசன் தூங்கி விழுந்தார்.
இதையும் படிங்க: எடியூரப்பா நெருங்கிய உதவியாளர் வீட்டில் சோதனை!