ETV Bharat / state

குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - ramanathapuram district news

ராமநாதபுரம்: குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.

குந்துகால் மீன்பிடி இறங்குதளத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

author img

By

Published : Nov 21, 2020, 6:10 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவிக்கும்வகையில், குந்துகால் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்.19ஆம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இந்த மீன்பிடி இறங்குதளத்தில் சுமார் 400 விசைப்படகுகளை நிறுத்திவைக்கலாம். மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை சேமித்துவைத்திட குளிர்பதன சேமிப்பு கிடங்கு உள்ளது. இதனை இன்று (நவ.21) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அலிவர் ஆய்வுசெய்தார்.

அப்போது அவர் மீன்பிடி இறங்குதளத்தில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் பாம்பன் அருகே தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ள சின்னபாலம் பகுதியில் ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வில் மீன்வளத் துறை துணை இயக்குநர் இளம்வழுதி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு முன்வரவேண்டும்- கனிமொழி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.