ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12இல் தொடங்கி மார்ச் 19இல் நிறைவடைகிறது. மார்ச் 20ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் 3 ஆயிரத்து 276 வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள், 2 ஆயிரத்து 160 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,302 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள், முதல் நிலை சரிபார்த்தல் நடத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மக்களவைத் தேர்தல்-2019இன் போது ராமநாதபுரத்தில் 1,369 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் படி 1,050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் கூடுதலாக 278 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1,647 அமைக்கப்படவுள்ளன. இந்நிலையில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முதுகுளத்தூர், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா 18, பரமக்குடி, ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா 17 என 70 வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க:தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளோம்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி