ETV Bharat / state

கரோனா மையங்களில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆய்வு! - கரோனா சிகிச்சை மையங்கள்

ராமநாதபுரம்: கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 524 கரோனா சிகிச்சைப் படுக்கை மையங்களை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

District Additional Collector Inspection at 524 Corona Centers!

author img

By

Published : May 19, 2021, 3:36 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில், கரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 392 நபர்கள் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் .

இதில் ஆயிரத்து 483 பேர் அவர்களது சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்குச் சிகிச்சை வழங்கிட ஏதுவாக, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நான்கு தனியார் மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி, பரமக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் கரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் மொத்தம் 524 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் உள்பட உயிர் காக்கும் மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி மற்றும் சேதுபதி அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உள்ள கரோனா பாதுகாப்பு மையங்களில் கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் ஆய்வு செய்தார்.

அங்கு கரோனா சிகிச்சைப் பெற்று வரும் நபர்களிடத்தில் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, உணவு குறித்து கேட்டறிந்தார். மேலும் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியிலுள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்படும் பொதுமக்கள், சிகிச்சைப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோருக்குத் தேவையான சத்தான உணவு, சுத்தமான குடிநீர் வசதி, கபசுரக் குடிநீர் முறையே வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் கூடுதல் ஆட்சியர், அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.