ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் 'தேசிய தலைவர்' என்ற தலைப்பில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் சவுத்ரி, தேவரின் கதாபாத்திரத்தில் நடித்துவரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பஷீர் உள்ளிட்ட படக்குழுவினர் தேவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
அதன்பின்னர் தயாரிப்பாளர் சவுத்ரி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தேசிய தலைவர் படம் வெளியாகும். முத்துராமலிங்கத் தேவர் சாதித் தலைவர் அல்ல. சாதியை ஒழித்த தலைவர். அவர் எல்லோருக்கும் தேசிய தலைவராக இருக்கிறார். அவருடைய படம் வெளிவந்தால் போலி அரசியல்வாதிகளுக்கும், சாதியை வைத்து படமெடுப்பவர்களுக்கும் சிறந்த பாடமாக இப்படம் அமையும்" என்றார்.
இதையும் படிங்க: பசும்பொன் தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!