ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து மறவர்கள் கூட்டமைப்பு சார்பில், கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவற்றில் முக்கியமான இரண்டு:
- வன்னியர்களுக்கு அதிமுக அரசு வழங்கியுள்ள 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும்,
- சீர்மரபினர் சமுதாயத்திற்கு வழங்கப்படும் இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக டி.என்.டி. (DNT) என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும்
ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.