ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில், டால்பின், கடல் பசு, திமிங்கலம் உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. அக்னி தீர்த்தக் கடற்பகுதியில் இன்று (ஜனவரி 2) இறந்த நிலையில், டால்பின் ஒன்று கரை ஒதுங்கியதாக மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறியதாவது, "பாட்டில் மூக்கன் இனத்தை சேர்ந்த டால்பின் ஒன்று முகத்தில் காயம்பட்ட நிலையில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இந்த டால்பின் 40 கிலோ எடையும், 4 அடி நீளமும் கொண்டது. கடலில் ஏற்படும் மாற்றங்கள், பாறைகள் மற்றும் பெரிய படகுகளில் மோதி டால்பின்கள் உயிரிழப்பது துரதிருஷ்டவசமானது. கடலோரப் பகுதி மக்களிடம் அரியவகை உயிரினமான டால்பின் குறித்து தொடர்ந்து வனத்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்றனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரம் செழிப்பான மாவட்டமாக மாறும் - முதலமைச்சர் பேச்சு