மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இரு தினங்களுக்கு முன் உருவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று விசாகப்பட்டினம் (ஆந்திரா) தென்கிழக்கில் சுமார் 430 கி.மீ தொலைவில், காக்கினாடாவுக்கு (ஆந்திரா) தென்கிழக்கில் 490 கி.மீ) மற்றும் நர்சாபூர் (ஆந்திரா) கிழக்கு தென்கிழக்கில் 520 கி.மீ மையம் கொண்டது.
இதன் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், 1500க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.