ETV Bharat / state

ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று - 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

author img

By

Published : May 18, 2020, 11:11 AM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் தீவில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக 30க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் சேதமடைந்தன.

சூறைக்காற்றில் சேதமடைந்த படகுகள்
சூறைக்காற்றில் சேதமடைந்த படகுகள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம், பாம்பன் பகுதிகளில் நேற்றிரவு இடி மின்னல் மற்றும் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து சில வீடுகள் இடிந்தன. மேலும் பாம்பன் வடக்கு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், அதேபோன்று மண்டபம் வடக்கு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.

இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப் படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். பொது முடக்கம், மீன்பிடி தடை காலம் காரணமாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சூறைக்காற்றில் சேதமானதற்கு முக்கிய காரணம் அப்பகுதிகளில் தூண்டில் வளைவுப் பாலம் இல்லை.

ஆகவே இது போன்ற ஆபத்து காலங்களில் படகுகளை பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் ராமேஸ்வரம் மண்டபம், பாம்பன் பகுதிகளில் தூண்டில் வளைவுப் பாலம் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாம்பனில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு; சீற்றம் தீவிரமடையும் என எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.