ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடல்அட்டைகள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மண்டபம் காவல்நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் தலைமைக் காவலர்கள் பாம்பன் பேருந்து நிறுத்தத்தில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.32லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.
கடல் அட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், வேனில் இருந்த இருவரை கைது செய்து விசாரித்ததில், இருவரும் ராமேஸ்வரம் எம்ஆர்டி நகரைச் சேர்ந்த லிங்கநாதன் மற்றும் சத்தியமூர்த்தி என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: 200 கிலோ கடல் அட்டையை பிடித்த 11 பேர் கைது!!