’தமிழ்நாட்டின் காசி’ என்றழைக்கப்படும் ராமேஸ்வரம், வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் சுற்றுலாத்தலமாகவும் மக்களுக்கான வழிபாட்டுத் தலமாகவும் விளங்கி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இங்குள்ள புனித இடமாகக் கருதப்படும் ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்து வழிபாடு செய்து, புனிதக் கடலில் நீராடுவது வழக்கம்.
இந்நிலையில், வடக்கு ரத வீதியில் உள்ள தீர்த்த கவுண்டரில் நிழற் குடை இல்லாததால், இந்தக் கோடைக் காலத்தில் பக்தர்கள் வெயிலில் அலைக்கழிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு
இதனால், பக்தர்களுக்கு நிழற்குடை அமைத்து வசதி செய்துதரக்கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர், திருக்கோயில் மேலாளர் சீனிவாசன் ஆகியோர் குடைகளுடன் சென்று இணை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அப்போது, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில்வேல், தாலுகா செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் திருக்கோயில் மேலாளர் சீனிவாசனிடம் மனுவை பெற்றுக்கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: 'ரமலான் நோன்பை தொடங்கிய வேலூர் மத்திய சிறை கைதிகள்!'