ETV Bharat / state

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம்!

ராமநாதபுரம்: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்.

Co - optex
Co - optex
author img

By

Published : Oct 15, 2020, 3:40 AM IST

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு அனைத்து கிளைகளிலும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து, இந்தாண்டு புதிதாக வந்துள்ள புதிய ரக சேலைகளை பார்வையிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் புதிய ரகங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் புது வரவாக குறைந்த விலையில் பருத்தி, பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் ஆகியவை தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும் உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பாரம்பரிய ரகங்களைப் புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், மதுரை, தஞ்சாவூர் ஸ்லப் காட்டன் சேலைகள், ஈரோடு காதா டிசைனர் போர்வைகள், பருத்தி மற்றும் பட்டு பரமக்குடி 1000 புட்டாச் சேலைகள் பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் மூலம் ராமநாதபுரம், பரமக்குடி என இரு நகரங்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளி விற்னையின் மூலம் ராமநாதபுரம் விற்பனை நிலையத்தில் ரூ.49.26 லட்சம் மதிப்பில் கைத்தறி ஆடைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ரூ.60 லட்சம் அளவில் கைத்தறி ஆடைகள் விற்பனை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி: கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.