ராமநாதபுரம் மாவட்டம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று முன்தினம் (பிப். 18) தொடங்கியது.
இரண்டாம் நாளான நேற்று (பிப். 19) நடைபெற்ற வாலிபால், கபாடி, நீச்சல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவியர் இருபாலரும் கலந்துகொண்டனர்.
பின்னர், வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 1000 ரூபாய்யும், இரண்டாவது பரிசாக 750 ரூபாய்யும், மூன்றாம் பரிசாக 500 ரூபாய்யும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் உயிரிழப்பு, 7 பேர் காயம்