ETV Bharat / state

யோகி ஆதித்யநாத் மீது கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புகார்! - ramanadhapuram latest news

ராமநாதபுரம் : உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி மீது சிபிஐ புகார்!

author img

By

Published : Apr 2, 2021, 10:28 PM IST

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன், ராமேஸ்வரம் நகர அதிமுகச் செயலாளர் அர்ச்சுணன், விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஆகியோர் மீது ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இன்று(ஏப்.2) புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகானந்தம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் அளித்தப் புகார் மனுவில், 'கடந்த மார்ச் 31ஆம் தேதி ராமேஸ்வரம் வருகை தந்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தேர்தல் கமிஷன் அனுமதி பெறாமல், ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சொந்தமான விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் மேடை அமைத்து பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

பொது இடத்தில் இருக்கக்கூடிய மடம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது என விதி இருந்தும்; அதை அப்பட்டமாக மீறி உள்ளார். எனவே, அவர் மீது தேர்தல் கமிஷன் வழக்கு தொடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

திண்டுக்கல் பெயரளவில் மட்டுமே மாநகராட்சி அந்தஸ்து பெற்றுள்ளது - ஐ.பெரியசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.