ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சோழியகுடி கிராமத்தில் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று (மார்ச் 19) எம்.வி. பட்டினம் தலைவர் ராஜமாணிக்கம், சிங்காரவேலன் நகர் பதினெட்டாம்படியான், செல்வராஜ் ஆகியோர் தலைமையில் ஆண்கள், பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுமார் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் கறுப்புக்கொடி கட்டியுள்ளனர்.
- மாநில அரசுகள் விற்பனை வரி நீக்கியதுபோல சாலையைப் பயன்படுத்தாமல் செலவாகும் மீனவர்களின் படகுகளுக்கு வழங்கும் டீசலுக்குச் சரியான 18 ரூபாயையும் நீக்கித் தர வேண்டும்,
- கரோனாவிற்குப் பிறகு ஏற்றுமதியாகும் எங்களின் கடல் உணவுப் பொருள்களை முன்புபோல வெளிநாட்டுச் சந்தையில் டீசல் விலை ஏற்றத்திற்குத் தகுந்தாற்போல் விற்பனையாக்கித் தர வேண்டும்,
- மீன்பிடித் தடை காலத்தில் விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் வலை, கயிறு, நூல் ஆகிய பொருள்களுக்கு மீன் துறை மூலம் கணக்கெடுத்து அதற்கேற்றாற்போல் மானியம் வழங்கி மீனவர்கள் வாழ்வாதாரம் பெருக உதவிபுரிந்திட வேண்டும்,
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ராமநாதபுரத்தில் தங்களின் தலைமைச் சங்கங்கள் நடத்தும் கூட்டத்தின் சார்பாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும்போது அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவுசெய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'கார் இல்லை கார வீடு இல்லை கையிருப்பிலும் காசு இல்லை' - மக்கள் வேட்பாளராய் களமிறங்கும் மாரிமுத்து