கிழக்கு மத்திய, தென் கிழக்கு வங்கக் கடல் அந்தமானுக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இந்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும், பிறகு 24 நேரத்தில் புயலாக மாறும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படலாம். காற்றின் வேகம் அதிகரிக்கும். இதனால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே நாகையில் புயல் எச்சரிக்கை