ETV Bharat / state

பரமக்குடி அருகே சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு!

இராமநாதபுரம்: பாம்பு விழுந்தான் பகுதியில் குழி தோண்டும் போது சுடுமண் உறைகிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியை முறையாக அகழாய்வு செய்ய தமிழ்நாடு அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ancient clay well found like keezhadi in paramakudi
author img

By

Published : Sep 30, 2019, 11:36 PM IST

இராமநாதபுரம் மாவட்டம் காட்டுப்பரமக்குடி அருகே உள்ள பாம்பு விழுந்தான் கிராமத்தில் ராக்கப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் திடல் பகுதியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சிவகுமார், ஊர்த்தலைவர் பூமிநாதன் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் துணையுடன் பரமக்குடியைச்சேர்ந்த ஆசிரியர் சரவணன் ஆய்வுப் பணியில் நேற்று ஈடுபட்டுள்ளனர்.

அந்தசமயத்தில் அங்கு குழி ஒன்று தோண்டும் போது பழங்கால சுடுமண் உறைகிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது கீழடி அகழாய்வில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள சுடுமண் உறைகிணற்றின் வடிவத்தை ஒத்துள்ளது.

மேலும், இப்பகுதியில் வேலைப்பாடுகள் மிக்க மண்பாண்டங்கள், மண்டை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன. வைகை ஆற்றங்கரையில் பரவியுள்ள வைகை நாகரிக தொல்லியல் மேடுகளில் பரமக்குடி பாம்பு விழுந்தான் என்ற இடமும் ஒன்றாகும்.

ஆகவே பாம்பு விழுந்தான் கிராமத்தில் தமிழ்நாடு அரசும், தொல்லியல் துறையும் முறையாக அகழாய்வு செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆசிரியர் சரவணன் கடந்த மாதம் பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட கலையூர் தொல்லியல் மேட்டில் இருந்து சமீபத்தில் முதுமக்கள் தாழி ஒன்றினை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 5ஆம் கட்ட கீழடி அகழாய்வு - நூலாக வெளியிட்ட தமிழ்நாடு தொல்லியல் துறை

Intro:இராமநாதபுரம்
செப்.30

கீழடி போல பரமக்குடி அருகே பழங்கால சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு, தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கும் மக்கள்.Body:இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரத்திற்கு உட்பட்ட காட்டுப்பரமக்குடி எல்லைக்கு உட்பட்ட பாம்பு விழுந்தான் கிராமத்தில் ராக்கப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பகுதி திடலில்
அக்கிராமத்தைச் சேர்ந்த
ஆசிரியர் சிவகுமார், ஊர்த்தலைவர் பூமிநாதன் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த
வாலிபர்கள் துணையுடன் பரமக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் ஆய்வுப் பணியில் நேற்று ஈடுபட்டுள்ளார்.

அதுசமயம் அங்கு குழி ஒன்று தோண்டுகையில் பழங்கால சுடுமண் உறைகிணறு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.மேலும் இப்பகுதியில் வேலைப் பாடுகள் மிக்க மண் பாண்டங்கள், மண் ஓடுகள் பழங்கால மக்களின் எலும்புகள் ஆகியன கிடைத்துள்ளன.

இங்கு கண்டு பிடிக்கப் பட்ட உறைகிணறு கீழடி அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள சுடுமண் உறைகிணற்றின் வடிவத்தை ஒத்துள்ளது. அதாவது மூல வைகை வருசநாடு மலைத் தொடரில் இருந்து வைகை ஆறு கடலில் கலக்கும் ஆற்றங்கரை மற்றும் கச்சத்தீவு வரையில் வைகை நாகரிகம் பரவி உள்ளது.
அதனடிப்படையில் வைகை ஆற்றங்கரையில் பரவியுள்ள வைகை நாகரிக தொல்லியல் மேடுகளில் பரமக்குடி பாம்பு விழுந்தான் என்ற இடமும் ஒன்றாகும்.

ஆகவே பாம்புவிழுந்தான் கிராமத்தில் தமிழ்நாடு அரசும், தொல்லியல் துறையும் முறையாக அகழாய்வு செய்து தமிழர்களின் வரலாறு பண்பாடு நாகரீகம் ஆகியவற்றை சான்றுகளுடன் வெளிப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் சரவணன் கடந்த மாதம் பரமக்குடி தாலுகா கலையூர் தொல்லியல் மேட்டில் இருந்து சமீபத்தில் முதுமக்கள் தாழி ஒன்றினை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.