ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மருத்துவர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுவரை அலோபதி மருத்துவர்கள் செய்துவந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி ராமநாதபுரத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான டாக்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும், வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: வேலை நிறுத்தம் - சென்னையில் வழக்கம்போல் ஓடிய பேருந்துகள்!