ETV Bharat / state

'பாஜக போட்டியிட்டால் கட்சியிலிருந்தே விலகுவோம்' - அதிமுகவினர் ஆவேசம்

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக போட்டியிட்டால் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டையை தலைமையிடம் ஒப்படைப்போம் என அதிமுக தொண்டர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Mar 11, 2021, 9:52 PM IST

ராமநாதபுரத்தில் அதிமுகவினர் சாலை மறியல்
ராமநாதபுரத்தில் அதிமுகவினர் சாலை மறியல்

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக, பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளதால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் அதிமுகவினர் சாலை மறியல்

இதுகுறித்து தெரிவித்த அவர்கள், "இந்தக் கூட்டணி ஒதுக்கீடை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை அதிமுகவின் தலைமை, மறுபரிசீலனை செய்யாவிட்டால் இந்தத் தேர்தலை புறக்கணிப்போம். இந்தப் பகுதியில் பாஜக படுதோல்வி அடையும்.

மறுபரிசீலனை செய்யாமல் பாஜக தேர்தலை சந்தித்தால், அதிமுக உறுப்பினர் அடையாள அட்டையை தலைமையிடம் ஒப்படைப்போம். அதிமுக ஆதரவாளர்களின் ஓட்டுகள் அனைத்தும் நோட்டாவிற்கு போடுவோம்' என கடும் கோபத்துடன் தெரிவித்தனர். இதனால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் அதிமுக, பாஜக கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:பல்லாவரம் சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர்: முன்னாள் எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.