சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருட சிறை தண்டனையை முடித்து கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த வி.கே. சசிகலா நாளை பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அதிமுக சார்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, இறந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் 100 ஆண்டுகள் கட்சி இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், ராமநாதபுர அதிமுகவின் மாவட்ட பிரதிநிதி புவனேஷ்வரி என்பவர் "அம்மாவின் மறு உருவமே அதிமுகவின் பொதுச்செயலாளர் சின்னம்மா வருக வருக" என ராமநாதபுரம் நகர் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.