ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.சி. ஆணிமுத்து நேற்று (மார்ச். 22) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சிறப்பு வழிபாடு செய்தார்.
கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில், திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.சி. ஆணிமுத்து தனது ஆதரவாளர்களுடன், முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, தேர்தலில் வெற்றிபெற வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பின்னர் கமுதி பேருந்து நிலையம் தேவர் சிலை, மருதுபாண்டியர் சிலை, காமராஜர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு செய்தார்.