ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளராக சென்னை பூக்கடை பஜார் பகுதியில் துணை ஆணையராகப் பதவியிலிருந்த கார்த்திக் இன்று (செப்டம்பர் 5) பதவியேற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "நான் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்த முதல் மாவட்டம் ராமநாதபுரம். பல ஜாம்பவான்கள் இந்த மாவட்டத்தில் சிறப்பாக பணி ஆற்றி உள்ளனர். தற்போது அவர்கள் செய்து வைத்திருக்கும் நல்ல பணியை தொடர்வேன். பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவேன்.
பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை அணுகலாம். 9498 129 498 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.