ராமநாதபுரத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி செய்து வந்த 37 காவல் துறையினருக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று (மே 20) அதே அலுவலகத்தில் பணிசெய்யும் காவல் துறையினருக்குக் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதன் மூலம் இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 காவல் துறையினர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் துறையினர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.