ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் பாண்டி (61). இவர் ராமநாதபுரம் வடக்குத் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இன்று காலை வடக்குத்தெரு நீலகண்டி ஊரணியில் குளிக்கச்சென்ற அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் ஊரணியிலிருந்து உடலைமீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: முயல் வேட்டைக்குச் சென்ற இருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு