ETV Bharat / state

பாம்பன் பாலத்தை அடுத்தடுத்து கடந்து சென்ற 60 விசைப்படகுகள் - பாம்பன் பாலத்தை கடந்த 60 ஆழ்கடல் விசைப்படகுகள்

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 60 ஆழ்கடல் விசைப்படகுகள் கடந்து சென்றது காண்போரை ஆச்சரியமடைய செய்தது.

பாம்பன் பாலத்தை கடந்த படகுகள்
பாம்பன் பாலத்தை கடந்த படகுகள்
author img

By

Published : Sep 23, 2021, 12:27 PM IST

ராமநாதபுரம்: நாகப்பட்டினம், சென்னை, விசாகப்பட்டிணம், ஒரிசா, கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு பகுதிகளிலுள்ள துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்களுக்கும்; தூத்துக்குடி, கன்னியாகுமாரி தென்பகுதி துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்களுக்கும், அதுபோல குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி துறைமுகங்களுக்கும், மீன்பிடி இறங்கு தளங்களுக்கும் செல்வதற்கு அனைத்துக் கப்பல்கள், ஆழ்கடல் விசைப்படகுகள் ஆகியன பாம்பன் பாலம் வழியாக வங்கக்கடலில் பயணிப்பது வழக்கம்.

இந்த கப்பல்கள், ஆழ்கடல் விசைப்படகுகள் ஆகியன கடல் காற்றின் வேகம், ரயில் செல்லும் நேரம் போன்ற நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே வாரத்திற்கு அதிகப்பட்சம் ஒருமுறை பாம்பன் பாலத்தை கடக்க அனுமதிக்கப்படுகின்றன.

ஒரே நேரத்தில் சென்ற 60 படகுகள்

இதனால் கடந்த இரண்டு தினங்களாக நாகப்பட்டிணம் துறைமுகத்தில் இருந்து 60 ஆழ்கடல் விசைப்படகுகள் பாம்பன் பாலத்தை கடந்து கேரளாவில் அரபிக்கடலில் மீன்பிடிப்பிற்குச் செல்வதற்காக தெற்கே பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நங்கூரமிட்டு காத்திருந்தன.

பாம்பன் பாலத்தை கடந்த படகுகள்

இந்நிலையில், இன்று (செப்.23) பாம்பன் ரயில் தூக்குப்பாலம் தூக்கப்பட்டதும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் காத்திருந்த 60 ஆழ்கடல் விசைப்படகுகள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன. ஒரே நேரத்தில் 60 ஆழ்கடல் விசைப்படகுகள் பாம்பன் பாலத்தை கடந்துச் சென்றது சென்றது காண்போரை ஆச்சரியமடைய செய்தது. மேலும், இந்நிகழ்வை ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு பரவசமடைந்தனர்.

இதையும் படிங்க: பாம்பன் தூக்கு பாலத்தில் பாறையில் சிக்கிய படகுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.