ராமநாதபுரம்: தமிழ்நாடு முழுவதும் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலங்களில் மதுக்கடைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி, பலர் அதிகமான மதுபான பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்ததோடு, அதை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் கார் பார்க்கிங் அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக ராமேஸ்வரம் நகர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டபோது, 50 ஆயிரம் மதிப்புள்ள 310 மது பாட்டில்களை மறைத்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து, தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'பிரசவத்திற்கு மட்டுமல்ல கரோனா நோயாளிகளுக்கும் இலவசம்' - ஆட்டோக்காரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு