ராமநாதபுரம் மாவட்டம், பாரதி நகர் அருகே வீட்டில் சீட்டை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கேணிக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், அங்குச் சென்ற காவல்துறையினர் முத்துகிருஷ்ணன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
சீட்டை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முத்துகிருஷ்ணன், சப்ரூதின், முகமது இலமைதீன், அஜ்மல் கான்,அப்பாஸ் அலி, செய்யது ஆரிப் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து 18 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.