ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வடக்கு தெரு அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளிகள், டாடா ஏசி வாகனத்தில் விவசாய பணிக்காக பெருநாழி அருகே உள்ள சின்னூர் கிராமத்திற்கு சென்றனர்.
அவர்கள் பணிகளை முடித்து வீடு திரும்புகையில், சாயல்குடி அருகே உள்ள புல்லந்தை கிராமம் அருகே அவர்களது வாகனம் வந்த போது, அது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், 32 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சாயல்குடி காவல்துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ், தனியார் ஆட்டோக்களின் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து சாயல்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் கொடூரம்: கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி!