ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் அக்டோபர் 5ஆம் தேதி சாயல்குடி அருகே உள்ள உறைகிணறு பகுதியைச் சேர்ந்த செண்பககுமார் - அன்னபூர்ணம் தம்பதிக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மேல் குடல் அடைப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதனால் கோபமடைந்த உறவினர்கள் சாயல்குடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் தான் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை உயிருடன் மீட்பு!