இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் நடக்கும் இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 26 செக்கு எண்ணெய் மையங்கள் உள்ளன. அவற்றின் மூலமாக மக்களுக்கு எண்ணெய் விநியோகம் சீராக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.
ராமநாதபுரத்தை பொருத்தவரை இன்றுவரை 229 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை அறியும் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை 188 பேருக்கு பரிசோதனை செய்ததில், 182 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இருவருக்கு கரோன உறுதியான நிலையில், அவர்கள் இருவரும் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என வந்துள்ளது. தொடர்ச்சியாக பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நான்கு பேரின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், நேற்றையதினம் அனுப்பப்பட்ட 41 பேரின் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.
சமூக இடைவெளியை பின்பற்றாத 88 கடைகளுக்கு, உள்ளாட்சி அலுவலர்கள் மூலமாக கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கல்