ராமநாதபுரம்: கமுதி அருகே பள்ளபச்சேரியிலிருந்து சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைபொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சார்பு ஆய்வாளர் காமாட்சிநாதன் தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த வாகனத்தை சோதனை செய்ததில் 1800 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதனையடுத்து பள்ளபச்சேரியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (46), பரமக்குடியை சேர்ந்த மணிக்குமார் (41) ஆகியோரை காவல்துறையினர் நேற்று (ஜூலை 11) ஆம் தேதி கைது செய்தனர்.
கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனம், 1800 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: புதிய சாலையில் வளைந்த கோடு - யாருப்பா அந்த பெயிண்டரு? மீம்ஸின் உண்மை பிண்ணணி