ETV Bharat / state

சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட 18 பேர் கைது! - ramanathapuram latest news

மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய, தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 18 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட 18 பேர் கைது!

author img

By

Published : Aug 16, 2021, 6:43 AM IST

ராமநாதபுரம்: சத்திரக்குடி அருகே உள்ள போகலூரில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரால் நேற்று (ஆக.15) சுங்கச்சாவடி முற்றுகையிடப்பட்டது.

இதனால் வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடக்க முடியாமல், சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்திரக்குடி காவல்துறையினர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: கோவையில் சமாதானப்புறாக்களை பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.