புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தோப்புப்பட்டி கிராமத்தில் வசித்துவருபவர் கருப்பையா. இவரது மனைவி பிச்சையம்மாள், இன்று காலை அப்பகுதியில் உள்ள காட்டுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் பிச்சையம்மாள் வீடு திரும்பாததால் அவரை தேடிச் சென்ற கணவர் கருப்பையா, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் குளத்திற்குச் செல்லும் பாதையில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டுள்ளார்.
விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அப்பகுதியில் தூர்வாரப்பட்டுவரும் குளத்திலிருந்து கிராவல் மண்ணை அள்ளுவதற்கு ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் ஏதோ ஒரு லாரி இவர் மீது மோதிவிட்டு சென்றதில் பிச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு இவரது மகன் சுப்பிரமணியன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.