மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இன்று வாக்குப்பதிவு என்பதால் விராலிமலை தொகுதிக்குள்பட்ட, பல்வேறு இடங்களுக்குச் சென்றுவந்தார்.
அப்போது கீரனூரிலிருந்து மாத்தூர் செல்லும்போது பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே கைநாங்கரையில் நடந்த விபத்தில் காயமடைந்த அண்டக்குளம் அப்துல்லாவை, தனது காரிலிருந்து இறங்கி ஓடி, விபத்துக்குள்ளான காரினைத் தூக்கி, அந்நபருக்கு முதலுதவி செய்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
இதையும் படிங்க: உதயநிதி சட்டையில் உதயசூரியன் - தகுதி நீக்க அதிமுக கோரிக்கை!