புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தின் உட்புறம் உள்ள அறந்தைரோட்டரி கிளப் சார்பில் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை திருச்சி மண்டல டிஐஜி ஆனிவிஜயா திறந்து வைத்து நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த பின்னர் மரக்கன்றுகளை நட்டார். அதைத்தொடர்ந்து மனுதாரர் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனுதாரர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அறந்தாங்கி துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன், ஆய்வாளர் ரவீந்தரன் அறந்தை ரோட்டரி சங்க நிறுவன தலைவர் ஆடிட்டர் தங்கதுரை, முன்னாள் செயலாளர் அரோமாபன்னீர், முன்னாள் பொருளாளர் சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறந்தவரின் உடலை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!