ETV Bharat / state

TN urban local body polls 2022: புதுக்கோட்டை நகராட்சித் தலைவிக்கு காத்திருக்கும் சவால்கள்! - நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்களுக்கு ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என முன்னாள் கவுன்சிலர்கள், அரசியல் கருத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சி
புதுக்கோட்டை நகராட்சி
author img

By

Published : Jan 20, 2022, 7:22 PM IST

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி, நூற்றாண்டு கண்ட நகராட்சி ஆகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே புதுக்கோட்டை நகராட்சி உருவாக்கப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சி தொடங்கப்பட்டு 109 ஆண்டுகளாகிறது.

2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை நகராட்சித் தலைவியாக திமுகவைச் சேர்ந்த ராமதிலகம் உடையப்பன் இருந்தார். அதன்பிறகு தற்போதுதான் புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை நகராட்சியில் இரண்டாவது பெண் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். புதுக்கோட்டை நகராட்சியைப் பொறுத்தவரை 42 வார்டுகள் உள்ளன. 42 வார்டுகளிலும் மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 669 வாக்காளர்கள் உள்ளனர்.

60 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்கள், 64 ஆயிரத்து 984 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். இந்நிலையில் 42 வார்டுகளில் 21 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் நகராட்சித் தலைவர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நகராட்சித் தலைவிக்கு அதிக சவால்கள் உள்ளதாக முன்னாள் கவுன்சிலர்கள், அரசியல் கருத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.

என்னென்ன சவால்கள்?

புதுக்கோட்டை நகராட்சி கடும் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் நகராட்சி நிர்வாகம் சிக்கித் தவிக்கிறது. மேலும் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்தும், இன்னும் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளன.

சுகாதார சீர்கேடு என்பது புதுக்கோட்டை நகராட்சியில் அதிகளவு உள்ளன. நகராட்சிக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வராமல் உள்ளன.

அதனை வசூல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோன்று ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் இருப்பதால் மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து செல்வதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இது போன்று பல்வேறு சவால்கள் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ளன. இவற்றை திட்டமிட்டு திறம்பட செயலாற்றும் அளவிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நகராட்சி தலைவி இருக்க வேண்டும் என அரசியல் கருத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளை முன்னிறுத்தி தேர்தலில் களமிறங்க உள்ள பெண் போட்டியாளர்கள் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பனங்காட்டு சலசலப்புக்கு இந்த நரி அஞ்சாது - கோவிந்தசாமி எம்எல்ஏ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.