புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடி சோதனைச்சாவடியில் நேற்று (மார்ச்3) மாலை 6 மணி அளவில் பறக்கும் படை அலுவலர் முத்துக்குமார் (BEO) தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மீமிசல் பகுதியிலிருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற தையாராம் (26), மீட்டாராம் (40) ஆகிய இருவரை நிறுத்தி சோதனைசெய்தனர். அப்போது உரிய ஆவணங்களின்றி 1 லட்சத்து 22 ஆயிரம் பணம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து பணத்தை மீட்ட பறக்கும்படை அலுவலர்கள் அறந்தாங்கி உதவி ஆட்சியர் ஆனந்த்மோகனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகையை உரிய முறையில் சீலிடப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க...அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு!