புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜோதிபாசு பேசுகையில், “தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையில் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில்தான் பணியாற்றிவருகின்றனர். ஐந்து ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களைப் பணிநிரந்தரம் செய்வோம் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.
ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாவிட்டால் ஜனவரி மூன்றாவது வாரத்தில் சென்னை கோட்டையை நோக்கிப் பேரணி நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தற்போது கோடை காலத்தில் தங்களுடைய பணி என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளதாகவும், ஆனால் நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டுமே அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதாகவும் தினக்கூலியில் பணியாற்றும் தங்களுக்கு இதுவரை அரசு சார்பில் எந்தவிதமான நிவாரணமும் வழங்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரசு தங்களுக்கும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் ஜோதிபாசு தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா-வியட்நாம் கடற்படை பயிற்சி: சீனா எதிராகப் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு