ETV Bharat / state

புதுக்கோட்டை: சாலை விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகள்! - latest pudukkottai district news

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் தாய், தந்தையை இழந்த மூன்று குழந்தைகளுக்கு அரசு உதவ முன்வரவேண்டும் என வாதிரிப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

three-children-losed-their-parent-in-road-accident-near-annavaasal
புதுக்கோட்டை: சாலை விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகள்!
author img

By

Published : Jun 5, 2021, 5:18 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள வாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி(50). இவர், மதுரையில் உணவகத்தில் தொழிலாளியாக வேலை செய்துவந்தவர். இவரது மனைவி வாதிரிபட்டியில் கூலி வேலை செய்துவந்தார். இவர்களுக்கு சுவேதா(15), மதுமிதா(9), அபிதா(9) என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில், திருமயம் அருகேயுள்ள அரண்மனைப்பட்டியில் தங்களது உறவினர் வீட்டுக்கு தூக்கம் விசாரிக்கச் சென்ற பழனிசாமி(50), மல்லிகா தம்பதியினர் மீது கார்மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவத்தால், வாதிரிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

தாய், தந்தையை விபத்தில் இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் மூன்று குழந்தைகளுக்கும் அரசு உதவமுன்வரவேண்டும் என வாதிரிபட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் இடிதாக்கி பயங்கர தீ விபத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.