ETV Bharat / state

பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட ‘நகை’ பை உரியவரிடம் ஒப்படைப்பு! - புதுக்கோட்டை தவறவிட்ட பை உரியவரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை: திருமயம் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நகை பை காவல் துறையினரால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Pudukottai Missing Money Bag Entrusted with Owner Pudukottai Missing Money Bag Issue Thirumayam Bus Stand Missing Money Bag Entrusted with Owner Missing Money Bag Entrusted with Owner புதுக்கோட்டை தவறவிட்ட பை உரியவரிடம் ஒப்படைப்பு திருமயம் பேருந்து நிலையம் தவறவிட்ட பை உரியவரிடம் ஒப்படைப்பு
Missing Money Bag Entrusted with Owner
author img

By

Published : Jan 20, 2020, 12:59 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர் நாடி அம்மாள். இவர் நேற்று மாலை 6 மணி அளவில் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றைக் கண்டு அதை எடுத்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தரிடம் ஒப்படைத்துள்ளார்.

சிக்கந்தர் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் நகை, பணம் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிக்கந்தர், திருமயம் காவல் துறையினரிடம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார். இந்நிலையில், அம்மாபட்டியைச் சேர்ந்த மீனா என்பவர் நகை, பணம் உள்ள பை ஒன்றை தவறவிட்டதாக பதட்டத்துடன் திருமயம் பேருந்து நிலையத்தில் புலம்பியுள்ளார்.

இதைக் கண்ட பொதுமக்கள் நகை, பணம் அடங்கிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மீனா திருமயம் காவல் நிலையத்திற்குச் சென்று தவறவிட்ட பை குறித்து கூறியுள்ளார். அப்போது, காவல் துறையினர் பையில் இருந்த பொருள்களின் அடையாளம் குறித்து கேட்டனர்.

அதற்கு அவர் ஒரு செயின், இரண்டு வளையல், ஒரு மோதிரம் உள்ளிட்ட 15 சவரன் நகை, ரூ. 440 பணம் உள்ளிட்டவை பையில் உள்ளதாகக் கூறினார். அதன்பின், பொன்னமராவதி துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் தவற விட்ட பொருள்களை மீனாவிடம் ஒப்படைத்தார்.

மேலும் தவறவிட்ட நகையை உரியவர்களிடம் ஒப்படைக்கும் படி காவல் நிலையத்தில் ஒப்படைத்த திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர், நாடி அம்மாள் ஆகிய இருவரையும் காவல் துறையினர் பராட்டினர்.

இதையும் படிங்க: பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

Intro:Body:
திருமயம் பஸ் ஸ்டாண்டில் கண்டெடுக்கப்பட்ட 15 சவரன் நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பஸ் ஸ்டாண்டிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் திருமயம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதனை எடுத்த நாடி அம்மாள் என்ற பெண் பஸ்ஸ்டாண்டில் கடை வைத்திருக்கும் திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் ஒப்படைத்தார். இதனைத்தொடர்ந்து பையை திறந்து பார்த்தபோது அதில் நகை, பணம் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிக்கந்தர் திருமயம் காவல்துறையிடம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார். இந்நிலையில் புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் குடியிருக்கும் திருமயம் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்த மீனாள் என்பவர் நகை, பணத்தை தவற விட்டதாக பதட்டத்துடன் திருமயம் பஸ் ஸ்டாண்டில் புலம்பியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் நகை பணம் அடங்கிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருமயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற மீனாள் தவறவிட்ட ஒரு செயின், 2 வளையல், ஒரு மோதிரம் உள்ளிட்ட 15 சவரன் நகை, ரூ. 440 பணம் உள்ளிட்ட அடையாளங்களைக் கூறினார். இந்நிலையில் பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன் மீனாவிடம் விசாரணை செய்து தவற விட்ட பொருளை ஒப்படைத்தார். மேலும் தவறவிட்ட நகையை உரியவர்களிடம் ஒப்படைக்கும் படி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் மற்றும் முதலில் நகையை ஒப்படைத்த நாடி அம்மாள் என்ற பெண்ணையும் போலீசார் பாராட்டிய அதேசமயம் பொருளை தவறவிட்ட மீனாவும் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.