ETV Bharat / state

'எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவு அறிவிக்க வேண்டும்' - கனிமொழி - thoothukudi district news in tamil

ராஜிவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றும், எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவு அறிவிக்க வேண்டும் என்றும் மக்களவை உறுப்பினர் கனிமொழி புதுக்கோட்டையில் தெரிவித்துள்ளார்.

the-governor-should-announce-the-decision-soon-regarding-the-release-of-the-seven-tamils
'எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவு அறிவிக்கவேண்டும்'- கனிமொழி
author img

By

Published : Jan 30, 2021, 9:46 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும், செங்கோட்டையில் யார் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும் அது தவறுதான். பத்தாண்டு அதிமுக ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை, ஆட்சி மாற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். பெண்கள் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என முடிவெடுத்துவிட்டனர்.

திமுக ஆட்சியில் மக்களின் குறைகள் தொடர்ந்து தீர்க்கப்பட்டுவந்தன, வாக்குறுதிகளை நிறைவேற்றிவந்தோம். இந்தப் பத்தாண்டு ஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அடிப்படைத் தேவைகளைக்கூட அரசு செய்துதரவில்லை, குடிமராமத்துப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்றார்.

'எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவு அறிவிக்க வேண்டும்' - கனிமொழி

தேமுதிக திமுக கூட்டணியில் இடம்பெறுமா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணி குறித்து திமுக தலைவர்தான் முடிவுசெய்வார். கட்சிகள் என்று இருந்தால் உள்கட்சிப் பூசல்கள் இருக்கத்தான் செய்யும் எனப் பதிலளித்தார்.

தொடர்ந்து எழுவர் விடுதலை குறித்து கருத்து தெரிவித்த அவர், எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு, எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 'இடஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸுக்கு ஆதரவாக நிற்பேன்' - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.