ETV Bharat / state

மக்கள் பாஜக ஆட்சியினை விரட்டி அடிக்க வேண்டும் - திருநாவுக்கரசர் - விரட்டி அடிக்க வேண்டும்

புதுக்கோட்டை: மக்கள் பாஜக ஆட்சியினை விரட்டி அடிக்க வேண்டும் என்றும், அப்போது தான் மக்களின் கஷ்டம் தீரும் என காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர்
author img

By

Published : Mar 31, 2019, 7:10 PM IST

புதுக்கோட்டையில் பரப்புரையின் போது அவர் கூறியதாவது, மக்கள் பாஜக ஆட்சியினை விரட்டி அடிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் கஷ்டம் தீரும்.

அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொருவரும் தனித்தனி ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் எல்லாம் அரசியலுக்கு தகுதியானவர்களே இல்லை, ஒரு சின்னம் கூட நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியவில்லை அப்படிப்பட்ட கட்சிக்கு வாக்களிப்பது தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதும் ஒன்றுதான்.

மேலும் புதுக்கோட்டையில் உச்சிவெயிலில் ஒவ்வொரு கிராமமாக சென்று பரப்புரை செய்து வருகிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. கண்டிப்பாக இம்முறை காங்கிரசு தான் ஆட்சிக்கு வரும். ராகுல் காந்தி பிரதமரானால் விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என அனைவருக்கும் நலம்பெறும் வகையில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Intro:கொளுத்தும் வெயிலில் அனல் பறக்கும் பிரச்சாரம்...

புதுக்கோட்டையில் மேலூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து அதைத் தொடர்ந்து மேலூர், அம்மாசத்திரம், நார்த்தாமலை போன்ற 9 பஞ்சாயத்துகளில் திருநாவுக்கரசர் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார்.

Body:பிரச்சாரத்தில் பேசிய அவர்,
மக்கள் பாஜக ஆட்சியினை விரட்டி அடிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் கஷ்டம் தீரும். மோடிக்கு எதிரான வசனங்களை தான் மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொருவரும் தனித்தனி ஆட்சி நடத்தி வருகின்றனர் கோஷ்டி கோஷ்டியாக சுத்தி கொண்டிருக்கின்றனர் இவர்கள் எல்லாம் அரசியலுக்கு தகுதியானவர்களே இல்லை ஒரு சின்னம் கூட நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியவில்லை அப்படிப்பட்ட கட்சிக்கு வாக்களிப்பது தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதும் ஒன்றுதான்.

மேலும் அவர் பேட்டி அளித்தபோது
தற்போது புதுக்கோட்டையில் உச்சிவெயிலில் ஒவ்வொரு கிராமமாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறேன் நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது.அதனால் கண்டிப்பாக காங்கிரசு தான் ஆட்சிக்கு வரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. "அம்மா கட்சி, ஆயா கட்சி" என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் எல்லாம் எங்களது கட்சியைப் பற்றி குறை கூறக்கூடாது. மோடி ஆட்சி வேண்டாம் என்றுதான் மக்களின் மனநிலை உள்ளது. ஏன் என்றால் மக்களை அவர் மிகவும் கொடுமைப்படுத்தி இருக்கிறார் என்பதுதான் உண்மை. அதனால் கண்டிப்பாக இம்முறை காங்கிரசு தான் ஆட்சிக்கு வரும் ராகுல் காந்தி அவர்கள் தன் பிரதமரானால் விவசாயிகளுக்கு மாணவர்களுக்கு பெண்களுக்கு ஏழை குடும்பங்களுக்கு என அனைவருக்கும் நலன்களை பெறும் வகையில் அறிக்கையை வெளியிட்டுள்ளார் இது மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது அதனால் ராகுல் காந்தி அவர்கள் இம்முறை பிரதமராக வரவேண்டும் என்ற கருத்தே மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு மக்களிடம் இருந்து ஆதரவு அலை வீசிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.