ETV Bharat / state

எலி மருந்து உட்கொண்டு இளம்பெண் தற்கொலை! - காவல்துறை விசாரணை

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே எலிமருந்து உட்கொண்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teen commits suicide by consuming rat poison

author img

By

Published : Oct 5, 2020, 10:37 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேவுள்ள அகரப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் புல்வயல் கொல்லம்பட்டியை சேர்ந்த சங்கீதா (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சங்கீதா, கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகையில் 8 சவரன் நகையை தனது தாய் வீட்டிற்கு கொடுத்துள்ளார். இதனால் சங்கீதாவின் மாமியார் பொன்னம்மாள், மாமனார் மாணிக்கம் ஆகியோர் தாய் வீட்டிற்கு கொடுத்த நகை பற்றி அடிக்கடி கேட்டு, தவறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சங்கீதா, தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கு அவர் எலிமருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த சங்கீதாவின் உறவினர்கள், உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சங்கீதா, இன்று (அக்.05) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சங்கீதாவிற்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆகியுள்ளதால், இவ்வழக்கை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சுகுமார் விசாரித்து வருகிறார்.

இதையும் படிங்க:இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இணங்க மறுத்ததால் பேருந்து உரிமையாளர் ஆத்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.