புதுக்கோட்டை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சனாதனம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.
இது இந்தியாவை பிளவுபடுத்துகிற செயல் அல்ல. இந்தியாவில் உள்ள அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில்தான் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார், அந்த முயற்சியில் வெற்றியும் பெறுவார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை வெற்றி அடைந்து வருகிறது. ஆனால் காவிரியில் தண்ணீர் திறக்க கூடாது என்று அங்கு போராட்டம் நடைபெறுகிறது.
தொடர்ந்து காவிரியில் இருந்து நீர் திறப்பதற்கு நாம் வலியுறுத்துவோம். ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் நீதிமன்ற முடிவை பொறுத்து அரசு நடவடிக்கை எடுக்கும். நடவடிக்கை எடுப்பது என்பது நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தது.
கொடுஞ்செயல் குற்றம் புரிந்த தண்டனை கைதிகளை மட்டும் சிறையில் இருக்க வேண்டும். பிற கைதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். நன்னடத்தை அடிப்படையில் என்று தான் தமிழக முதல்வர் நினைத்து விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேலூரில் திமுக வார்டு கவுன்சிலர்கள் இடையே மோதல்.. ஒருவர் படுகாயம்!