ETV Bharat / state

வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றவர்களை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு! - Stuck in Dubai 6 people Request for redemption

புதுக்கோட்டை: தூபாய்க்கு வேலைக்குச் சென்ற ஆறு பேரை மீட்கக் கோரி அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவர்களை மீட்டுத் தரக் கோரிக்கை

author img

By

Published : May 27, 2020, 8:13 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் சுந்தரம்பட்டி, கூத்தம்பட்டி, பிலியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் 2011ஆம் ஆண்டு துபாய் நாட்டிற்கு வேலைக்குச் சென்று உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வருட காலமாக அவர்கள் பணியாற்றி வரும் நிறுவனம் அவர்களுக்கு, ஊதியம் வழங்காததால் உணவிற்கே வழியின்றி அந்த ஆறு இளைஞர்களும் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே அவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காணொலி வெளியிட்டிருந்தனர். கரோனா பாதிப்பால் மீண்டும் அவர்கள் தாங்கள் கஷ்டப்படுவதை பெற்றோர்களிடம் அலைபேசியில் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக அந்த இளைஞர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் இன்று புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "தங்களது மகன்கள் துபாயில் கரோனாவால் உணவுக்கே வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் சம்பளம் வழங்கப்படவில்லை. ஆகவே ஆறு பேரையும் விரைவில் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: தற்காப்பு கலை வகுப்புகளுக்கு அனுமதி கோரி மனு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.