ETV Bharat / state

ஆந்திரா தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பு: சொந்த ஊருக்கு அனுப்புமா அரசு?

புதுக்கோட்டை: கரும்பு வெட்டும் பணிக்கு வந்த ஆந்திர மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் உணவின்றி குழந்தைகளுடன் தவித்துவருகின்றனர்.

author img

By

Published : May 30, 2020, 3:07 PM IST

ஆந்திர மாநில தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பு

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மல்லபாலம் என்ற கிராமத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள குறும்பூர் சர்க்கரை ஆலையில் கரும்பு வெட்டும் பணிக்கு வந்தனர்.

அதில் ஒரு மாத பணி முடிந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் தவிர மீதமுள்ளவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர்.

சொந்த ஊர்களுக்கு செல்லாத 21 பேரும் குறுங்குளம் சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிக்கு கரும்பு வெட்டும் பணிக்குச் சென்றனர். அதன்பின் மார்ச் மாதம் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தோட்ட உரிமையாளர்கள் அந்த தொழிலாளர்களை பாதுகாப்பாக தங்க வைத்திருந்தாலும் கூட கரும்பு ஆலை நிர்வாகம் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை சரியாக வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மே மாதம் முதல் வாரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களை சொந்த ஊருக்கு அனுப்புமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

அதனை பரீசிலித்த காவல்துறையும், வருவாய்துறையும் அவர்களை ஆதனகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரண்டொரு நாட்களில் அனுப்பிவிடுவதாகவும், தங்களுக்கு தேவையானதை செய்வதாகவும் மாவட்ட நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். அப்படி உறுதியளித்து 20 நாட்களைக் கடந்தும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமலும், அவர்கள் ஊருக்கு திரும்ப எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மண்டபத்தின் உரிமையாளரும் அவர்களை மண்டபத்திலிருந்து வெளியேற்றி பூட்டினார். இதனால் தற்போது தங்க இடமின்றி, உணவின்றி குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்.

இவர்களை அங்கிருந்து அனுப்பிய சித்தூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் இதுகுறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது, "அவர்கள் படும் அனைத்து சிரமங்கள், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் காட்டும் அலட்சியங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அலுவலர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் தான் ஆந்திர அரசு பதிலளிக்கும். ஆந்திரா மாநில பார்டரில் கொண்டு வந்து விட்டால் கூட நான் அழைத்து வந்து விடுவேன்" என்றார்.

அதன்பின் வருவாய்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "இவர்களை ஆந்திராவிற்கு அனுப்ப தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் பட்டினியாக கிடந்த விவரம் எங்களுக்கு தெரியாது. இப்போது தான் தெரியவந்தது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை இன்று அல்லது நாளைக்குள் ஆந்திராவிற்கு அனுப்பி வைக்க முயற்சி மேற்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரையில் 2 குழந்தை தொழிலாளர்கள் உள்பட 5 பேர் மீட்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.