புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கலந்துகொண்ட கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், "வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கான முகாம்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அதில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர்களை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்காக வாக்குச்சாவடி மையங்களில் பிரத்தியேகமான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அதனால் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார். இந்தமுகாமில் தாசில்தார் முருகப்பன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல் உள்ளிட்ட கலந்து கொண்டனர் .